- சர்வதேச மகளிர் தினம்
- காஞ்சி கிருஷ்ணா கல்லூரி
- காஞ்சிபுரம்
- காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- கீழம்பி
- இளைஞர் செஞ்சிலுவை சங்கம்
- தேசிய…
காஞ்சிபுரம்: காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளைஞர் செஞ்சுலுவைச் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து, சர்வதேச மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்லூரி நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். தாளாளர் அரங்கநாதன், தலைவர் தாமோதரன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷன் துணை ஆட்சியர் பா.க்யூரி மற்றும் காஞ்சிபுரம் சாமிநாத முதலியார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, முதுகலை ஆசிரியர் மற்றும் ஆன்மீக பேச்சாளர் எம்.கலைச்செல்வி ஆகியோர் பங்கேற்று பெண்ணியம், கல்வி, பெண்களின் முன்னேற்றம், சமூக வளர்ச்சி, பெண்களின் பாதுகாப்பு, அடிமைத்தனம், பெண்களின் வாழ்வியல் கருத்துக்கள் குறித்தும் பெண்கள் முன்னேற்றம் மற்றும் கல்வியால் பெண்கள் சமூகத்தில் ஒரு உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதையும் விளக்கி பேசினர். இந்நிகழ்ச்சியில் முடிவில், கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ம.பிரகாஷ் நன்றி கூறினார். பேராசிரியர்கள் பேபி, காஞ்சனா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆனந்தன், புண்ணிக்கோட்டி ஆகியோர் செய்திருந்தனர்.
The post காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா appeared first on Dinakaran.
