×

தனியார் பேருந்து மோதி வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப பலி: டிரைவர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பாபி காஜ்டி (30), டபாஸ் (24), இருவரும் செம்பரம்பாக்கம் பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்றனர். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை ஏற்றி வந்த பேருந்து சாலையை கடந்த முயன்றவர்கள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த சங்கர் (48) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தனியார் பேருந்து மோதி வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : northern state ,Poonamalli ,Bobby Khajdi ,Dabas ,West Bengal ,Chembarambakkam ,Dinakaran ,
× RELATED பர்கூர் அருகே ஹவாலா பண விவகாரம்...