சென்னை: சென்னை வானகரம் சர்வீஸ் சாலையில் நேற்று திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அசாமைச் சேர்ந்த துர்ஜன் கந்தோர் (20) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் வேலப்பன்சாவடியில் தங்கி லோடுமேன் வேலை செய்து வருகிறார். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
