- இராமலிங்கம் சட்டமன்ற
- நாமக்கல்
- நாமக்கல் செல்லப்பா காலனி
- செல்லப்பா காலனி
- பெரிய கவுண்டம்பாளையம்
- நாமக்கல் ஊராட்சி ஒன்றியம்
- நபார்ட்
- தின மலர்
நாமக்கல், மார்ச் 11: நாமக்கல் செல்லப்பா காலனியில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை ராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செல்லப்பா காலனி, பெரிய கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில், நபார்டு திட்டத்தின் கீழ் ₹1.50 கோடியில் புதியதாக தார்சாலை மற்றும் சாலை புதுப்பிக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பூமி பூஜை செல்லப்பா காலனியில் நடந்தது. இதில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பிரபாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post ₹1.50 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி ராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
