×

ராசிபுரத்தில் 383 மூட்டை பருத்தி ₹8 லட்சத்திற்கு ஏலம்

ராசிபுரம், மார்ச் 11: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு பருத்தி பயிரிடப்படுகிறது. சாகுபடிக்கு பின் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம், ஆர்.சி.எம்.எஸ்., கிடங்கில் பருத்தி ஏலம் நடப்பது வழக்கம். நேற்று நடந்த ஏலத்திற்கு 383 மூட்டை பருத்தி ஏலத்திற்கு ெகாண்டு வரப்பட்டது. இதில் ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால் குறைந்தபட்சம் ₹6,003க்கும், அதிகபட்சம் ₹7,800க்கும் விற்பனையானது. அதே போல், கொட்டு ரகம் குறைந்தபட்சம் ₹2,670க்கும், அதிகபட்சம் ₹4010க்கும் விற்பனையானது. ஆர்.சி.எச்., 372 மூட்டை, கொட்டு 11 மூட்டை என மொத்தம் 383 மூட்டைகள் ₹8 லட்சத்திற்கு விற்பனையானது.

The post ராசிபுரத்தில் 383 மூட்டை பருத்தி ₹8 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal district ,RCMS ,Kaundampalayam ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்