×

வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாட்டம்

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சாதனைகளை ஒப்புக்கொண்டு, பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், மாணவிகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான கை பைகளை தயாரிக்கும் பயிற்சி வித்யாசாகர் கல்விக் குழுமம் ஊக்கத்துடன் வழங்கியதால் கல்லூரி வளாகத்தில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில், கல்லூரியைச் சேர்ந்த 1700 மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்பயிற்சியில், மாணவிகள் மறு பயன்பாட்டிற்கு கைபைகளை உருவாக்குவதற்கான நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சுற்றுச் சூழலுக்கேற்ப கைப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதில் ஆர்வம் காட்டினர். இது எதிர்கால சந்ததியினருக்காக உலகை பாதுகாக்கும் அவர்களின் பொறுப்புணர்வும் வெளிப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் வித்யாசாகர் கல்வி குழும தாளாளர் விகாஸ் சுரானா. கல்லூரி முதல்வர் அருணாதேவி உட்பட பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

The post வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Women's Day ,Vidyasagar ,Women's ,College ,Chengalpattu ,International Women's Day ,Chengalpattu… ,Vidyasagar Women's College ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...