×

அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 8: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம் நடைபெற்றது. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி(எ) ெஜகதீசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரசாரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஜெயராமன், முன்னாள் நகர செயலாளர் நாகேஷ், பொதுக்குழு உறுப்பினர் சம்பங்கிராமரெட்டி, முன்னாள் அவைத்தலைவர் பழனிசாமி, பூசமணி, கிருஷ்ணமூர்த்தி, டேவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Thekkady ,Thekkady, Krishnagiri district ,Jayalalithaa Peravai District ,Chitti (A) Jagatheesan ,Vice President ,Raman ,Krishnagiri West District ,Former Minister ,Balakrishna Reddy ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை