- இந்தியானா வெல்ஸ் டென்னிஸ்
- வால்டன்
- செப்பியேரி
- இந்தியானா வெல்ஸ்
- ஆடம் வால்டன்
- டேவிட் கேபின்
- இந்தியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்
- இந்தியானா…
- தின மலர்
இண்டியானா வெல்ஸ்: இண்டியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் போட்டிகளில் நேற்று ஆஸ்திரேலியா வீரர் ஆடம் வால்டன், பெல்ஜியம் வீரர் டேவிட் காபின் அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் இண்டியானா வெல்ஸ் நகரில் இண்டியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் ஆஸி வீரர் ஆடம் வால்டன், இத்தாலி வீரர் கியுலியோ ஸெபியரி மோதினர். முதல் செட் போட்டி கடுமையாக இருந்ததால் அதை போராடி வென்ற ஆடம் வால்டன் 2வது செட்டை எளிதில் கைப்பற்றினார். இதனால், 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் பெல்ஜியம் வீரர் டேவிட் காபின், இத்தாலி வீரர் லொரென்ஸோ சொனேகோ மோதினர். முதல் செட்டை எளிதில் வென்ற டேவிட் 2வது செட்டை கடுமையாக போராடி கைப்பற்ற நேரிட்டது. இதனால், 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
* கெஸ்லர், கிம்பர்லி அசத்தல் வெற்றி
இண்டியானாவெல்ஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் ரஷ்ய வீராங்கனை அன்னா விளாடிமிரோவ்னா பிளிங்கோவா, அமெரிக்க வீராங்கனை மெக்கார்ட்னி கெஸ்லர் மோதினர். இந்த போட்டியில் எந்தவித சிரமமுன்றி அமெரிக்க வீராங்கனை கெஸ்லர், 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், சுவிட்சர்லாந்து வீராங்கனை விக்டோரிஜா கொலுபிக், ஆஸ்திரேலியா வீராங்கனை கிம்பர்லி பிரெல் உடன் மோதினார். அபாரமாக ஆடிய கிம்பர்லி, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
The post இண்டியானாவெல்ஸ் டென்னிஸ்: இத்தாலி வீரர் ஸெபியரியை கெத்தாக வென்ற வால்டன் appeared first on Dinakaran.
