மும்பை:ஒருநாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருப்பர் ஸ்ரேயாஸ் அய்யர். 31 வயதான இவர் கடந்த அக்டோபர் 25ம் தேதி சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அலெக்ஸ் கேரியின் கேட்ச்சை பிடித்தபோது கீழே விழுந்ததில் மண்ணீரலில் காயம் அடைந்தார். சிட்னி மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவர் 3 நாட்களுக்கு பின் டிஸ்சார்ஜ் ஆனார். தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் பேட்டிங் பயிற்சியை தொடங்கி உள்ளார். மும்பையில் அவர் சுமார் 1 மணி நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இதில் எந்த அசெளகரியத்தையும் உணரவில்லை. விரைவில் அவர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று உடற்தகுதியை நிரூபிக்க உள்ளார். இதனால் நியூசிலாந்துக்கு எதிராக வரும் 11ம்தேதி தொடங்கும் ஒருநாள் தொடர் அவர் களம் இறங்குவார் என தெரிகிறது.
இதேபோல் கேப்டன் சுப்மன் கில், கடந்த வாரம் பயிற்சியின் போது கால் விரலில் காயம் அடைந்ததால் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி 2 டி.20 போட்டியில் ஆட வில்லை. இந்நிலையில் நேற்று அவர் மொகாலி மைதானத்தில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். பஞ்சாப் அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் 2 போட்டியில் ஆட உள்ள அவர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் களம் இறங்க தயாராகி வருகிறார்.
