- ஆப்ரிக்கா
- ரசின்
- வில்லியம்சன்
- புதிய அடையாளம்
- நியூசிலாந்து
- ரசின் ரவீந்திர
- சாம்பியன்ஸ் கோப்பை அரை இ
- தெற்கு
- தின மலர்

* ரச்சின், வில்லியம்சன் புதிய மைல்கல்
நியூசிலாந்து இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா தென் ஆப்ரிக்காவுடன் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் 108 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இந்த 5 சதங்களையும் ஐசிசி ஒருநாள் தொடர்களான உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையில்தான் அடித்து உள்ளார். இதன் மூலம் தனது முதல் 5 ஒருநாள் சதங்களையும் ஐசிசி தொடர்களில் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை ரச்சின் ரவீந்திரா நிகழ்த்தி உள்ளார்.
* தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதி நியூசி வீரர் கேன் வில்லியம்சன் 102 ரன் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் (ஒருநாள், டெஸ்ட், டி20) 19,000 ரன்களை கடந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 19,000 ரன்களை எட்டும் முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை கேன் வில்லியம்சன் பெற்றார். 2ம் இடத்தில் ராஸ் டெய்லர் (18,199 ரன்) உள்ளார். கேன் வில்லியம்சன் இதுவரை 15 சதங்கள் அடித்து உள்ளார். கடைசியாக அடித்த 3 சதமும் தென் ஆப்ரிக்காவுடன் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் 3 சதங்களையும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார்.
* 2002ம் ஆண்டு இலங்கையில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இங்கிலாந்து எதிரான போட்டியில் 77 பந்துகளில் இந்தியாவின் அதிரடி வீரர் சேவாக் சதம் விளாசி இருந்தார். இதுவே சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிவேகமாக அடித்த சதமாகும். இந்த சாதனையை 23 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர் முறியடித்து உள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக அரையிறுதி போட்டியில் 67 பந்துகளில் மில்லர் சதம் அடித்து புதிய சாதனை படைத்து உள்ளார்.
* ஐசிசி தொடர் அரையிறுதியில் தெ.ஆ. ஆடிய போட்டிகள் விவரம்
ஐசிசி தொடர் எதிர் அணி முடிவு
1992 உலகக்கோப்பை இங்கிலாந்து தோல்வி
1998 சாம்பியன்ஸ் கோப்பை இலங்கை வெற்றி
1999 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா டை
2000 சாம்பின்ஸ் கோப்பை இந்தியா தோல்வி
2002 சாம்பின்ஸ் கோப்பை இந்தியா தோல்வி
2006 சாம்பின்ஸ் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் தோல்வி
2007 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா தோல்வி
2013 சாம்பின்ஸ் கோப்பை இங்கிலாந்து தோல்வி
2015 உலகக்கோப்பை நியூசிலாந்து தோல்வி
2023 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா தோல்வி
2025 சாம்பியன்ஸ் கோப்பை நியூசிலாந்து தோல்வி
The post தோல்வி ஒன்றே மாறாதது… செமி பைனலில் பை..பை.. தெ.ஆப்ரிக்கா சாதனை appeared first on Dinakaran.
