- மத்திய அமைச்சர்
- நித்ன் கட்காரி
- புது தில்லி
- சர்வதேச சாலை உள்கட்டமைப்பு உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி
- யூனியன் சாலைப் போக்குவரத்து
- நெடுஞ்சாலை அமைச்சர்
புதுடெல்லி: சர்வதேச சாலை இன்பிராடெக் உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நேற்று நடந்தது. இதில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது,‘‘நாட்டில் பெரும்பாலான சாலை விபத்துகள் சிறிய சிவில் தவறுகள், தவறான விரிவான திட்ட அறிக்கைகள் (டிபிஆர்) காரணமாக நிகழ்கின்றன. இதற்கு யாரும் பொறுப்பேற்பது இல்லை.
சாலையோரங்களில் வைக்கப்படும் பலகைகள் மற்றும் அடையாள அமைப்புகள் போன்ற சிறிய விஷயங்கள் கூட இந்தியாவில் மிகவும் மோசமாக உள்ளன. ஸ்பெயின், ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிடமிருந்து நாம் இதை கற்றுக்கொள்ள வேண்டும்.இந்தியாவில் மோசமான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. மோசமான திட்டமிடல், வடிவமைப்பினால் தான் அதிகளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன. இதற்கு இன்ஜினியர்களே காரணம்’’ என்று கூறினார்.
The post சாலை விபத்துகள் அதிகரிப்புக்கு இன்ஜினியர்கள்தான் காரணம்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
