×

கங்கையை ஏமாற்றிய மோடி அரசு: கார்கே

புதுடெல்லி: உத்தரகாண்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடி முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலில் வழிபாடு நடத்தினார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இதனை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘மோடி ஜி கங்கை மா தன்னை அழைத்தது என்று கூறியிருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் கங்கையை சுத்தம் செய்வதற்காக கொடுத்த தனது வாக்குறுதியை மறந்துவிட்டார்.

நமாமி கங்கை திட்டம் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 2026ம் ஆண்டுக்குள் இந்த திட்டத்திற்கு ரூ.42,500கோடி பயன்படுத்தப்பட இருந்தது. ஆனால் 2024ம் ஆண்டு வரை ரூ.19,271 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கான பதில்களில் தெரியவந்துள்ளது. நமாமி கங்கை திட்டத்தின் நிதியில் 55சதவீதத்தை மோடி அரசு செலவிடவில்லை. கங்கை மா மீது ஏன் இவ்வளவு அலட்சியம்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post கங்கையை ஏமாற்றிய மோடி அரசு: கார்கே appeared first on Dinakaran.

Tags : Modi government ,New Delhi ,Modi ,Uttarakhand ,Ganga Devi temple ,Mukhwa ,Congress party ,Mallikarjun Kharge ,
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்