×

சுப்பிரமணியபுரம் பகுதியில் ₹53.6 லட்சம் மதிப்பில் நடைபயிற்சி பூங்கா

திருச்சி, மார்ச் 6: திருச்சி சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே குடியிருப்பாளர்களுக்கு புதிய திறந்தவெளி மற்றும் நடைபாதையை உருவாக்க திருச்சி மாநகராட்சி 53.6 லட்சம் ரூபாய் ஒப்புதல் அளித்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களை ஈர்க்கும் கன்டோன்மென்ட்டில் உள்ள அய்யப்பன் கோயில் அருகே இதேபோன்ற திறந்தவெளி பூங்காவுடன் கூடிய நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உருவாக்கிய நிலையில், அதன் பயன்பாடு மிகச்சிறப்பாக அமைந்ததால், அடுத்தகட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உற்சாகம் அடைந்த உள்ளாட்சி அமைப்பு, பொது இடத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அதே மாதிரியைப் பின்பற்றும்.

சுப்பிரமணியபுரத்தில் உள்ள சுந்தர்ராஜ் நகர் அருகே உள்ள நெடுஞ்சாலையையொட்டி உள்ள பயன்பாடற்று கிடக்கும் ஒருபகுதி சுமார் 11,000 சதுர அடி நிலப்பரப்பு உள்ளது. இந்த இடத்தில் அவ்வப்பபோது பல்வேறு ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. 47 வது வார்டு கீழ் வரும் இந்த பகுதியில் காலியாக உள்ள இடத்தில் பல ஆண்டுகளாக ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்களை ஆதாரமாக கொண்டு நடமாடும் தெரு விற்பனையாளர்கள் நிரந்தரமாக ஸ்டால்களை அமைத்துள்ளனர், இது குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் சர்வீஸ் சாலையில் பொதுமக்களின் போக்குவரத்தை பாதிக்கிறது. கன்டோன்மென்ட்டில் உள்ள மேஜர் சரவணன் சாலையில் பைலட் திறந்தவெளி பசுமைத் திட்டம் வெற்றிகரமான முடிவுகளைப் பெற்றுள்ளதால், ஒவ்வொரு மாலையும் வார இறுதிகளிலும் குடியிருப்பாளர்கள் அந்த இடத்தில் திரண்டு வருவதால், சுப்பிரமணியபுரத்தில் காலியாக உள்ள நிலம் இதேபோன்ற திட்டத்திற்கு ஏற்றது என்று உள்ளாட்சி அமைப்பு கண்டறிந்துள்ளது. உள்ளாட்சி அமைப்பால் நிதி அனுமதிக்கப்பட்டு, நிலத்தைப் பாதுகாப்பதற்கான முதற்கட்டப் பணிகள் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளன. விண்டேஜ் தீம் தெரு விளக்குகள், கல்லால் செய்யப்பட்ட அமரும் இறுக்கைகள் மற்றும் அலங்கார தாவரங்கள் இந்த இடத்தில் வரும் என்று கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். “வேலி அமைக்கும் வசதி செய்யப்படும்.

திறந்தவெளி பசுமைக்காக அடையாளம் காணப்பட்ட காலியான நிலத்திற்கு அருகில் ஒரு திறந்த உடற்பயிற்சி கூடம் இருப்பதால், இந்த திட்டம் 47,48 மற்றும் 59 உள்ளிட்ட மூன்று வார்டுகளில் வசிப்பவர்களால் நன்கு வரவேற்கப்படும். மேலும், சாலை சர்வதேச விமான நிலையத்தை இணைப்பதால், விமான நிலையத்தைப் பயன்படுத்தும் விஐபிக்கள் உட்பட பார்வையாளர்களிடையே நகரத்தைப் பற்றிய பொதுவான கருத்து மேம்படும்”என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

The post சுப்பிரமணியபுரம் பகுதியில் ₹53.6 லட்சம் மதிப்பில் நடைபயிற்சி பூங்கா appeared first on Dinakaran.

Tags : Walking park ,Subramaniyapuram ,Trichy ,Trichy Municipality ,Tiruchi-Pudukkottai National Highway ,Trichchi International Airport ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...