×

சமக்கல்வி கொள்கை இணையதளம் தொடக்கம்; மோடி பஞ்சாங்கத்தை அனைவரும் படிக்க வேண்டும்: அண்ணாமலை பேச்சு

சென்னை: மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு மக்களிடம் ஆதரவு திரட்டும் பொருட்டு 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கத்தை பாஜ நேற்று தொடங்கியது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில், தமிழக பாஜ Puthiyakalvi.in எனும் இணையதளத்தை பாஜ மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், சமக்கல்வி எங்கள் உரிமை என்ற பாடலை பாஜ முத்த தலைவர் எச். ராஜா மற்றும் கையெழுத்து இயக்கத்தை பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:இது பல ஆண்டுகளாக பாஜவின் போராட்டம். 1965ல் காங்கிரஸ் கட்சி செய்தது இந்தி திணிப்பு, அன்றிலிருந்து 2020 வரை இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என இருந்தது. 2021ல் மூன்றாவது மொழி இந்தி கட்டாய மொழி கிடையாது, மாற்று மொழியை, வேண்டிய மொழியை படித்துக் கொள்ளலாம் என சட்டம் கொண்டு வரப்பட்டது. மோடி பஞ்சாங்கத்தை அனைவரும் படிக்க வேண்டும். மூன்றாவது மொழி என்பது நம் விருப்பமே, இது இந்தி திணிப்பு கிடையாது என்றார்.

The post சமக்கல்வி கொள்கை இணையதளம் தொடக்கம்; மோடி பஞ்சாங்கத்தை அனைவரும் படிக்க வேண்டும்: அண்ணாமலை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,BJP ,Tamil Nadu ,Aminkarai, Chennai ,Puthiyakalvi.in ,BJP… ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...