×

கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா

ஓசூர், மார்ச் 5: ஓசூர் அடுத்த சூளகிரி ஊராட்சி ஒன்றியம், பி.எஸ்.திம்மசந்திரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் போதிய வகுப்பறை வசதியின்றி அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, சிஎப்எஸ்ஐடிஎஸ் திட்டத்தின் கீழ், ₹32.80 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த வகுப்பறை கட்டிடங்களை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, கிருஷ்ணகிரி கோபிநாத் எம்.பி., ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ், கிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Additional Classroom Building Opening Ceremony ,Ozur ,Solagiri Uratchi Union ,p. ,S. Uradachi Union Primary School ,Dimmachandiram ,CFSIDS ,Dinakaran ,
× RELATED ஓசூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்