- குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
- போச்சம்பள்ளி
- Velampatti
- நாகரசம்பட்டி
- தமிழ்நாடு காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு
- மூத்த கண்காணிப்பாளர்
- ஜெய்சிங்...
- தின மலர்
போச்சம்பள்ளி, மார்ச் 5: தமிழ்நாடு காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், நாகரசம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட வேலம்பட்டியில் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறார் திருமணம் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல்துறை உயரதிகாரி ஜெய்சிங் தலைமை தாங்கினார். காவல் உதவி ஆய்வாளர் அருணகிரி, எஸ்எஸ்ஐ ராமநாதன், நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி ஆய்வாளர் சங்கீதா வரவேற்றார். பேரூராட்சி தலைவர் தம்பிதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெண் வன்கொடுமை, பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் மற்றும் சிறார் திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
The post சிறார் திருமணம் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.
