×

வரும் 12ம் தேதி மாவிலங்கை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

 

பெரம்பலூர், மார்ச். 4: மாவிலங்கை கிராமத்தில் வரும் 12ம்தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடை பெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, மாவிலங்கை கிராமத்தில், வருகிற 12ஆம்தேதி புதன்கிழமை, மாவட்டக் கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, ஆலத்தூர் தாலுக்கா, மாவிலங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை, மாவிலங்கை கிராம நிருவாக அலுவலகத்தில் முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே அல்லது தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post வரும் 12ம் தேதி மாவிலங்கை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Relations Project ,Mavilangai Village ,Perambalur ,Collector ,Grace Bachao ,Alathur Taluk, Perambalur District ,Public Relations Project ,Camp ,
× RELATED அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...