ராசிபுரம், மார்ச் 4: ராசிபுரம் அங்காளம்மன் கோயிலில் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா, கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் புஷ்ப பல்லக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். கடந்த 26ம்தேதி மகா சிவராத்திரி விழா தொடங்கியது. இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதிகாலை தீமிதி விழா நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில், சனிக்கிழமை மாலை மயான கொள்ளையும், நேற்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடந்தது. புஷ்ப பல்லக்கத்தில் வைர நகைகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட அம்மனை வைத்து திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, மஞ்சள் நீர் ஊற்றினர்.
The post அங்காளம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.
