×

கலெக்டர் ஆபீசுக்கு பெட்ரோல் பாட்டிலுடன் மனு கொடுக்க வந்த பெண்

நாமக்கல், மார்ச் 4: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கொன்னையாறு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வசந்தா. இவர் நேற்று, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், அவர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனையிட்டனர். அதில் ஒரு பாட்டில் பெட்ரோல் இருப்பதை பார்த்தனர். பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்து வசந்தாவிடம் விசாரித்தனர். அப்போது அவர், தான் குடியிருந்து வரும் வீட்டிற்கு பல ஆண்டாக பட்டா கேட்டு மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெட்ரோல் கேனுடன் வந்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

The post கலெக்டர் ஆபீசுக்கு பெட்ரோல் பாட்டிலுடன் மனு கொடுக்க வந்த பெண் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Perumal ,Konnaiyaru ,Trinchengod, Namakkal district ,Vasantha ,People's Reduction Day ,Namakkal District Collector's Office ,Collector's Office ,Dinakaran ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்