×

டூவீலர்கள் மோதி விவசாயி பலி ; இருவர் படுகாயம்

கிருஷ்ணகிரி, மார்ச் 4: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே கருக்கனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாதன்(எ) மாதப்பன். விவசாயியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(36) என்பவருடன் டூவீலரில் கருக்கனஅள்ளி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே கோவை மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன்(25) என்பவர் வந்த டூவீலர் மோதியது. இதில், படுகாயமடைந்த மாதன், கோவிந்தராஜ், தீனதயாளன் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே மாதன் இறந்து விட்டார். கோவிந்தராஜ், தீனதயாளன் ஆகியோருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதி விவசாயி பலி ; இருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Madhan (A) Madhappan ,Karukanalli ,Rayakottai ,Krishnagiri district ,Govindaraj ,36 ,Coimbatore, Madhapur ,Dinakaran ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு