ராசிபுரம், மார்ச் 4: ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், விவசாயிகள் கொண்டுவந்த 98 கிலோ பட்டுக்கூடுகள், ₹68 ஆயிரத்துக்கு விற்பனையானது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு ஏல விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. விவசாயிகள் கொண்டு வரும் பட்டுக்கூடுகள், தினசரி இங்கு ஏலம் மூலமாக பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டுவந்த ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று விவசாயிகள் கொண்டுவந்த பட்டுக்கூடு கிலோ அதிகபட்சம் ₹730க்கும், குறைந்தபட்சம் ₹651 க்கும், சராசரியாக ₹651க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக 98 கிலோ பட்டுக் கூடுகள் ₹68 ஆயிரத்துக்கு விற்பனையானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ராசிபுரம் ஏல மையத்தில் 98 கிலோ பட்டுக்கூடுகள் ₹68 ஆயிரத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.
