- பிரம்மோத்சவக் கொடி
- திருவல்லம் வில்வநாதீஸ்வரர் கோயில்
- Thiruvalam
- பிரம்மோத்சவ கொடியேற்ற விழா.
- தனுமதியாம்பாள் சமேத கோவில்
- பொன்னையாறு 'நீவா' ஆறு
- திருவலம் பஞ்சாயத்து
- காட்பாடி தாலுகா
- வேலூர் மாவட்டம்…
திருவலம், மார்ச் 4: திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ கொடியேற்று விழா நேற்று நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் பொன்னையாறு ‘நீவா’ நதிக்கரையோரம் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தனுமத்யம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் தொண்டை நன்நாட்டில் பாடல் பெற்ற 32 திருத்தலங்களில் 10வது திருத்தலமாகும். நால்வரால் பாடல் பெற்ற மகா சிவத்தலம் ஆகும். இக்கோயிலில் கனிவாங்கிய விநாயகருக்கு தனி சன்னதி இருப்பதும், கோயில் மூலவர் சன்னதி முன்பு நந்தியம்பெருமான் புறம் காட்டி கிழக்கு நோக்கி இருப்பதும் வரலாற்று சிறப்பாகும்.
இக்கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம், பிரதோஷ வழிபாடுகள், ஆண்டுதோறும் மாசி மாதம் பிரமோற்சவ தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பிரமோற்சவ தேர் திருவிழாவையொட்டி பிரமோற்சவ கொடியேற்று விழா நேற்று காலை நடந்தது.
இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகள் மாட வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து கோயில் அர்ச்சகர்கள் குழுவினர் வேதமந்திரங்கள் முழங்க, சிறப்பு மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் கோயில் கொடி மரத்தில் பிரமோற்சவ கொடியேற்றுதல் நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் சிவாய நம, சிவாய நம என பக்தி முழக்கமிட்டனர். இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், புஷ்பம் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரமோற்சவ திருவிழாவையொட்டி தினமும் பகல், இரவு வேளைகளில் உற்சவமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு மாட வீதிகளின் வழியாக திருவீதி உலா பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், திருவிழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
The post பிரமோற்சவ கொடியேற்று விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் appeared first on Dinakaran.
