- எட்டயபுரம்
- சீதலட்சுமி
- கீழ்த்தெரு,
- மெளனம்பிபுரம்,
- எட்டயபுரம் தாலுக்கா
- தூத்துக்குடி மாவட்டம்
- ராமஜெயந்தி
- பூவன்
- ராதா
எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா மேலநம்பிபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சீதாலட்சுமி (75). இவரது மகள் ராமஜெயந்தி (45). இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சீதாலட்சுமி கணவர் பூவணன், ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். இந்த தம்பதியருக்கு ராதா, ராமஜெயந்தி என இரு மகள்கள், ராமசாமி என்ற மகனும் இருந்தனர். பூவணன் இறப்புக்கு பின்னர் மூத்த மகள் ராதா நோய்வாய்ப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். மகன் ராமசாமியும் விபத்தில் உயிரிழந்தார். ராமஜெயந்தி திருமணமாகி கணவருடன் நெல்லையில் வசித்து வந்தார்.
தந்தை, சகோதரி மற்றும் சகோதரன் இறப்புக்கு பிறகு கணவரை பிரிந்து மேலநம்பிபுரம் வந்து விட்டார் கடந்த 10 ஆண்டுகளாக தாயும், மகளும் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் பக்கத்து வீட்டார்களோடு எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் சர்ச்சுக்கு சென்று திரும்பியவர்கள், நேற்று மாலை வரை வெளியே வரவில்லை. இந்நிலையில் சீதாலட்சுமி உறவினர் ஒருவர் போன் செய்துள்ளார். போனை வேறொருவர் எடுத்து பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த நபர், பக்கத்து வீட்டுக்கு போன் செய்து சீதாலட்சுமி வீட்டில் இருக்கிறாரா என்று பார்க்க சொல்லியுள்ளார். அவர்கள் சென்று பார்த்த போதுதான் இருவரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
தகவலறிந்து எட்டயபுரம் போலீசார் சென்று பார்த்தபோது சீதாலட்சுமி கழுத்து நெரித்தும் தலையணையால் அழுத்தியும், மகள் ராமஜெயந்தி கழுத்து நெரித்தும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இருவரும் அணிந்திருந்த தங்க நகைகளும் மாயமாகியிருந்தது. எனவே 2க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து நகைக்காக இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகளும் கொள்ளை போயிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்பி அல்பர்ட்ஜான் மற்றும் போலீசாரும் பார்வையிட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
The post எட்டயபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் கழுத்து நெரித்துக்கொலை appeared first on Dinakaran.
