கடந்த 03.05.2018 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாவட்ட வருவாய் அலுவலரின் பதவியை வைத்து அரசு வேலை வாங்கி தருவதாக பணம் ரூ.2,40,000/- ஐ நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக ஈரோடு கருங்கல்பாளையம், கிருஷ்ணா வீதியை சேர்ந்த தினேஷ் என்பவரின் மனைவி பிரவீனா(30) என்பவர் சென்னை, உயர்நீதிமன்றத்தில் மனு பதிவு செய்து அதன் உத்தரவின் பேரில், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட திண்டுக்கல் மாவட்டம், பழனி, கொடுவார்பட்டி கிராமத்தை சேர்ந்த சிபாகி என்பவரின் மகன் மூர்த்தி (எ) ஜான் மூர்த்தி(48) மற்றும் கருங்கல்பாளையம், ராஜகோபால் தோட்டம், MAV காலனியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் விஜயலட்சுமி (42) ஆகிய இரு எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
மேற்படி வழக்கானது ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் || ல் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று 30.12.2025-ம் தேதி S.ராஜ்குமார், BA., BL., குற்றவியல் நடுவர் நீதிமன்றம் II, ஈரோடு குற்றவாளிகளுக்கு 5 ஆண்டு 6 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.11000/-அபராதமும் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, மேற்படி குற்றவாளிகள் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
