×

தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு: கணக்கில் வராத ரூ.3.63 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே போல்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பத்திரப்பதிவு செய்வதற்காக பணம் கைமாற உள்ளதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பத்திரப்பதிவு அலுவலக 3வது மாடியில் உள்ள மாவட்ட பதிவாளர் தணிக்கை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.3.63 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை வைத்திருந்த மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சதாசிவம் மற்றும் ஏரல் சார்பதிவாளர் (பொறுப்பு) செல்வக்குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு: கணக்கில் வராத ரூ.3.63 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi District Deeds Registration Office ,Thoothukudi ,Integrated District Deeds Registration Office ,Polpettai ,District Anti-Corruption Department ,DSP ,Peter Paul… ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...