×

ரஞ்சி கோப்பை இறுதியில் கேரளா போராட்டம் விதர்பா முன்னேற்றம்

நாக்பூர்: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. முதலில் களமிறங்கிய விதர்பா அணி டேனிஸ் மலேவரின் அதிரடி சதத்தால் (153 ரன்), 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து 2வது நாளில் முதல் இன்னிங்சை துவக்கிய கேரளா ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்திருந்தது.

நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணியின் ஆதித்ய சர்வதே 79, அஹம்மது இம்ரான் 37, கேப்டன் சச்சின் பேபி 98 ரன் குவித்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் கேரளா 342 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் விதர்பா அணி 37 ரன்கள் முன்னிலை பெற்றது. இன்று 4ம் நாள் ஆட்டம் தொடர்கிறது. விதர்பா அணி முன்னிலை பெற்றுள்ளதால் இப்போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

The post ரஞ்சி கோப்பை இறுதியில் கேரளா போராட்டம் விதர்பா முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Ranji Cup ,Vidarbha ,Nagpur ,Dennis Malevar ,Dinakaran ,
× RELATED உலகக் கோப்பை டி20: சூர்யகுமார்...