×

4 இன்ஸ்பெக்டர்கள் திடீர் டிரான்ஸ்பர் வேலூர் சரக டிஐஜி உத்தரவு

வேலூர், பிப்.28: வேலூர் காவல் சரகத்தில் 4 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் ரேகா மதி, உம்ராபாத் காவல் நிலையத்திற்கும், வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் மனோமணி, செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்களான ஜான்பிரிட்டோ, திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கும், கேத்ரின் மேரி குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து வேலூர் காவல் சரக டிஐஜி தேவராணி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

The post 4 இன்ஸ்பெக்டர்கள் திடீர் டிரான்ஸ்பர் வேலூர் சரக டிஐஜி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DIG ,Vellore ,Tirupattur Taluka ,Inspector ,Rekha Madhi ,Umrabad ,police station ,Vaniyambadi ,Manomani ,Cheyyar ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு...