×

உருமு தனலட்சுமி அரசு கல்லூரி சாம்பியன் கல்லூரிகளுக்கு இடையேயான கராத்தே போட்டி

திருச்சி, பிப்.28: கல்லூரிகளுக்கு இடையேயான கராத்தே போட்டி திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் நடந்தது. போட்டியை முதல்வர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றன. போட்டியானது இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு குமித்தே மற்றும் கதா போட்டி நடைபெற்றது. பெண்கள் பிரிவு போட்டியில் உருமு தனலட்சுமி கல்லூரி அணி இரண்டு தங்கப்பதக்கம் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டியில் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியும் முதலிடமும், தஞ்சாவூர் பாண்ட் சக்கர்ஸ் கல்லூரி இரண்டாமிடமும், மூன்றாம் இடத்தை குயின்ஸ் கல்லூரியும் வென்றன.

ஆண்கள் பிரிவு கராத்தே போட்டியில் ஏவிஎம் புஷ்பம் கல்லூரி முதல் இடத்தையும், திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி இரண்டாம் இடத்தையும், பிஷப் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் ராஜா சரபோசி அரசு கலைக்கல்லூரியும் மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டன. இதில் விளையாட்டு செயலாளர் டாக்டர் மெகபூப்ஜான், தமிழ்நாடு விளையாட்டு கராத்தே சங்க துணைத்தலைவர் கியோஷி ஈஸ்வர்குமார், திருச்சி கராத்தே சங்கத் தலைவர் ஷிஹான், டாக்டர் சிவகுமார், உடற்கல்வி இயக்குநர் எழிலரசி, ஒருங்கிணைப்பாளர் ஜான் பார்த்திபன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

The post உருமு தனலட்சுமி அரசு கல்லூரி சாம்பியன் கல்லூரிகளுக்கு இடையேயான கராத்தே போட்டி appeared first on Dinakaran.

Tags : Urumu Dhanalakshmi Government ,College ,Inter-College Karate Competition ,Trichy ,Urumu Dhanalakshmi College ,Chief Minister ,Ravichandran ,Urumu Dhanalakshmi Government College Inter-College Karate Competition ,
× RELATED கலைஞர் பல்கலைக்கு கையெழுத்திட...