×

மாவட்டத்தில் அனுமதியின்றி எருதாட்டம் நடத்திய 12 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, பிப்.28: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சக்கில்நத்தம் கிராமத்தில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது. இதுகுறித்து சிகரலப்பள்ளி விஏஓ ஜெயபிரகாஷ், பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் எருது விடும் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்த அதே பகுதியை சேர்ந்த கருணாகரன்(42), சதீஷ்(40), செந்தில்குமார்(46) ஆகிய 3பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், சின்னமட்டாரப்பள்ளி பூங்குருத்தி சாலையில், அனுமதியின்றி நடந்த எருதாட்ட விழா பற்றி, சின்னமட்டாரப்பள்ளி விஏஓ ரோஷினி, கந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

அதன்பேரில், அதே பகுதியை சேர்ந்த சென்னப்பண்ணன்(31), உமாபதி(42), வடிவேல்(39), ராஜூ(45) ஆகிய 4பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கிருஷ்ணகிரி ஒம்பலக்கட்டு பகுதியில் அனுமதியின்றி நடந்த எருதாட்ட விழா பற்றி, கூலியம் விஏஓ வெங்டேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில், முக்குராஜ்(60), ரமேஷ்(40), கோவிந்தசாமி(38), சக்திவேல்(32), ஜெகநாதன்(40) ஆகிய 5பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாவட்டத்தில் அனுமதியின்றி எருதாட்டம் நடத்திய 12 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Sakkilnatham village ,Bargur ,Krishnagiri district ,VAO Jayaprakash ,Sikaralappally ,station ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை