×

பர்னிச்சர் கடையில் தீ விபத்து

 

ஈரோடு,பிப்.28: ஈரோட்டில் பர்னிச்சர் கடையில் நேற்று காலை மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. ஈரோடு பவானி சாலை காமராஜ் நகரில் அலாவுதீன் என்பவர் வளர்பிறை என்ற பெயரில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். நேற்று காலை 6.25 மணியளவில் பர்னிச்சர் ஷெட்டில் மின் கசிவு காரணமாக பழைய மர கட்டை துண்டுகளில் தீப்பிடித்து எரிய துவங்கியது. தகவலறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் மர பொருட்கள், ப்ளைவுட் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது.

The post பர்னிச்சர் கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Erode ,Alauddin ,Valarpirai ,Kamaraj Nagar, Bhavani Road, Erode ,Dinakaran ,
× RELATED புகையிலை, மது விற்ற 3 பேர் கைது