×

திமுக சார்பில் கோலப்போட்டி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு

ஆலந்தூர்: ஆலந்தூர் தெற்கு பகுதி 167வது வட்ட திமுக சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி 10 இடங்களில் கோலப்போட்டி கடந்த வாரம் நடந்தது.  இதன் பரிசு வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியில், வட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். மகளிரணியை சேர்ந்த துர்கா நடராஜன், ரமணா பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் கலந்துகொண்டு கோலப் போட்டியில் முதலிடம் பெற்றவருக்கு 2 கிராம் தங்கம், 2வது இடம் பெற்றவர்களுக்கு 1 கிராம் தங்கம் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பட்டுப்புடவைகளை வழங்கினார்.இதில் நங்கநல்லூர், பழவந்தாங்கல், நலச்சங்க நிர்வாகிகள், மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அரசு விதிமுறைகளின்படி சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்தபடி பரிசுப் பொருட்களை பெற்றுச் சென்றனர்….

The post திமுக சார்பில் கோலப்போட்டி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Kolapotti ,Dizagam ,Alandur ,167th Circular Dizhagam ,Kolapoti ,Kolapoti Prize ,Dinakaran ,
× RELATED ஆதம்பாக்கம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க கோரிக்கை