- மகா
- சத்தியமங்கலம்
- பெரியகுளம்
- வரதம்பாளையம்
- புளியங்கோம்பை
- சிக்கரசம்பலம்
- ராமபைலூர்
- கோயம்புத்தூர்
- திருப்பூர்…
சத்தியமங்கலம், பிப்.26: சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரியகுளம், வரதம்பாளையம், புளியங்கோம்பை, சிக்கரசம்பாளையம், ராமபைலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் சம்பங்கி பூக்கள் அதிகாலையில் பறிக்கப்பட்டு கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பண்டிகை நாட்கள் மற்றும் விழா காலங்களில் சம்பங்கி பூக்களின் தேவை அதிகரிப்பதால் அவ்வப்போது பூக்களின் விளையும் அதிகரித்து விற்பனையாவது வழக்கம். அதன்படி இன்று புதன்கிழமை சிவராத்திரி பண்டிகை தினம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்தது.
இதன் காரணமாக சத்தியமங்கலத்தில் நேற்று முன்தினம் சம்பங்கி ஒரு கிலோ ரூ.140க்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.80 விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனையானது. சம்பங்கி பூக்கள் விலை உயர்ந்து விற்பனையானதால் பூக்களை விற்பனைக்கு கொண்டு சென்ற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post மகா சிவராத்திரியையொட்டி சம்பங்கி பூ விலை உயர்வு appeared first on Dinakaran.
