- ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்ட கைப்பந்து போட்டி
- Senthamangalam
- பருத்திமுடி
- அரியூர்நாடு ஊராட்சி, கொல்லிமலை
- முதல் அமைச்சர்
- ஜெயலலிதா
- தின மலர்
சேந்தமங்கலம், பிப்.26: கொல்லிமலை ஒன்றியம், அரியூர்நாடு ஊராட்சி பருத்திமுடி கிராமத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து, 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டியை முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். மேலும், முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு வெற்றிக்கோப்பை, பரிசுத்தொகை, சிறந்த வீரர்களுக்கு பதக்கம் உள்ளிட்டவற்றை வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நாகலிங்கம், முன்னாள் கவுன்சிலர் தனுஷ்கோடி சுப்பிரமணியம், ஊர் நிர்வாகிகள் யுவராஜ், சந்திரசேகரன், செல்லாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ஜெயலலிதா பிறந்தநாள் விழா வாலிபால் போட்டி appeared first on Dinakaran.
