×

காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையம் முன்பு, இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பு (தமிழ்நாடு) மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில், தமிழகத்தில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து, காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

மதிமுக மாணவரணி மாநில துணை செயலாளர் கோபிநாத், மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில நிர்வாக குழு உறுப்பினர் மணிகண்டன், டிஎஸ்எப் மாவட்ட தலைவர் வெங்கடேசன், முற்போக்கு மாணவர் அமைப்பு மாவட்ட தலைவர் துரைப்பாக்கம் விமல் ராஜ், இந்திய முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பு மாவட்ட தலைவர் அம்புரோஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாணவர் முற்போக்கு கழக மாவட்ட அமைப்பாளர் சுந்தர், மாவட்ட துணை அமைப்பாளர் சரத் வளவன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், இந்திய திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பதுடன் தமிழ் நாட்டிற்க்கு தரவேண்டிய கல்வி நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், மீண்டும் ஒரு மொழிப்போர் போராட்டத்திற்கு நிர்பந்திக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் விரிவாக பேசினார்கள். முடிவில், காஞ்சிபுரம் மாநகர மாணவரணி அமைப்பாளர் பாரதிதாசன் நன்றி கூறினார்.

The post காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kancheepuram Chief Post Office ,Union government ,Kancheepuram ,Kanchipuram Chief Post Office ,Federation of Student Movements ,Tamil Nadu ,Kanchipuram District Dimuka Student Team ,Union ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...