×

துபாய் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போர்ஜஸ் அபார வெற்றி

துபாய்: துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்சை, போர்ச்சுகல் வீரர் நுனோ போர்ஜஸ் அபாரமாக ஆடி வென்றார்.
துபாயில் துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நேற்று நடந்தன. முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ், போர்ச்சுகல் வீரர் நுனோ போர்ஜஸ் மோதினர். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இதற்கு முந்தைய போட்டிகளில் பெற்ற வெற்றி, தோல்வி அடிப்படையில் துபாய் டென்னிசில் 8ம் நிலை வீரராக ஆர்தர் விளையாடினார்.

அவரை 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் நுனோ போர்ஜஸ் வென்று அசத்தினார். மற்றொரு போட்டியில் குரோஷிய வீரர் மாரின் சிலிக், ஆஸ்திரேலிய வீரர் அலெக் டிமினார் களம் கண்டனர். முதல் இரு செட்களில் தலா ஒரு செட்டை இரு வீரர்களும் கைப்பற்றினர். 3வது செட் சிலிக் வசமானது. இதனால், 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் சிலிக் வென்றார்.

 

The post துபாய் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போர்ஜஸ் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Borges ,Dubai Open ,Dubai ,Portugal ,Nuno Borges ,France ,Arthur Ashe ,Dubai… ,Dinakaran ,
× RELATED வெ.இ.க்கு எதிரான 3வது டெஸ்டில்: வெற்றி...