×

விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம்

 

நாமக்கல் பிப்.24: நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வேலுசாமி முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், விளைநிலங்களின் பாசன வசதிக்காக, விவசாய மின் மோட்டார்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டது. தற்போது விவசாயத்திற்கு 24 மணிநேரமும், மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் கருகி சேதமாகி வருகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், தமிழகம் முழுவதும் விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Chief Minister ,Narayanasamy Naidu ,Tamil Nadu Farmers' Association ,state ,president ,Velusamy ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்