×

மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு: ஜூன் 26ம் தேதி மின்பொறியாளர்கள் நாடு தழுவிய ஸ்டிரைக்

புதுடெல்லி: அகில இந்திய மின்பொறியாளர்கள் கூட்டமைப்பு(ஏஐபிஈஎப்) வௌியிட்டுள்ள அறிக்கையில், “மின்சார பயன்பாடுகள் மற்றும் மின்துறைகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 26ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட மின்சார ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது.

இந்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றியடைய செய்வதற்காக ஏப்ரல், மே மாதங்களில் நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் பெரிய மாநாடுகள் நடத்தப்படும். மேலும் உத்தரபிரதேசத்தில் மின்சார துறையை தனியார் மயமாக்க நடந்து வரும் செயல்முறைகளுக்கு எதிராக நான்கு பேரணிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு: ஜூன் 26ம் தேதி மின்பொறியாளர்கள் நாடு தழுவிய ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,All India Federation of Electrical Engineers ,AIPEF ,National Coordination Committee of Electrical Employees and Engineers ,Dinakaran ,
× RELATED அவசரமாக குழந்தைகளுடன் பெட்டியில்...