×

வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற மமக வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் சென்னை ராயபுரத்தில் நேற்று நடந்தது. செயற்குழுவிற்கு தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, பொருளாளர் கோவை உமர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில், ஒன்றிய பாஜ அரசின் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரும் கூட்ட தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற மமக வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : MMC ,Chennai ,Humanity People's Party ,Royapuram, Chennai ,President Professor ,MH Jawahirullah MLA ,General Secretary ,Abdul Samad MLA ,Treasurer ,Kovai Umar ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண்...