×

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் டிஆர்ஓ வழங்கினார் கே.வி.குப்பத்தில் சிறப்பு முகாம்

கே.வி.குப்பம், பிப்.22: கே.வி.குப்பத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை டிஆர்ஓ மாலதி வழங்கினார். வேலூர் மாவட்டத்தில் 19 அரசுத்துறைகளை ஒருங்கிணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் வட்டார அளவில் நடந்து வருகிறது. அதன்படி, கே.வி.குப்பம் வட்டார அளவிலான சிறப்பு முகாம் கே.வி.குப்பம் பிடிஓ அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்- கலெக்டர் சுபலட்சுமி வரவேற்றார். எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீதாராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளராக டிஆர்ஓ மாலதி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் கே.வி.குப்பம் வட்டாரத்திற்கு உட்பட்ட 1,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். 447 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தலா ₹1.09 லட்சம் மதிப்பில் 5 பேருக்கு இருசக்கர வாகனம், 150 பேருக்கு தனித்துவமான தேசிய அடையாள அட்டை, 136 பேருக்கு புதிதாக மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, 64 பேருக்கு பஸ் பாஸ், 64 பேருக்கு ரயில் பாஸ் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டிருந்த 19 அரசுத்துறைகளின் கண்காட்சி அரங்கத்தை டிஆர்ஓ மாலதி பார்வையிட்டார். இம்முகாமில் தாசில்தார் சந்தோஷ், பிடிஓக்கள் பெருமாள், சதீஷ்குமார், மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர் சசிதரன், வட்டார மகளிர் திட்ட மேலாளர் வனிதா, மாவட்ட கவுன்சிலர் அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயா முருகேசன், சுரேஷ், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் டிஆர்ஓ வழங்கினார் கே.வி.குப்பத்தில் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : DRO ,K.V.Kuppam. ,K.V.Kuppam ,Malathi ,Vellore ,Dinakaran ,
× RELATED கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை...