- போக்குவரத்து SI
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம்
- போக்குவரத்து எஸ்.ஐ.
- துரைராஜ்
- சௌரிராஜன்
- காஞ்சிபுரம் நீதிமன்றம்
- தின மலர்
காஞ்சிபுரம்,பிப்.22: காஞ்சிபுரத்தில் டூவீலரில் சென்றவரை வழிமறித்து உரிய ஆவணங்கள் இன்றி வேகமாக வந்ததாக கூறி, லஞ்சம் கேட்ட புகாரில் போக்குவரத்து எஸ்ஐக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ் மகன் சவுரிராஜன். இவர், தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜென்டாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த, 2009ம் ஆண்டு காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே தனது டூவீலரில் சென்றபோது, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து எஸ்ஐ தங்கராஜ் சவுரிராஜனை நிறுத்தி சோதனை செய்து, ஆவணங்கள் இன்றி வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாகக்கூறி அவரது அடையாள அட்டையை பறிமுதல் செய்துள்ளார்.
மேலும், வழக்குப்பதிவு செய்யாமல் இருக்கவும், அடையாள அட்டையை திருப்பி கொடுக்கவும் தனக்கு ₹2,000 லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத சவுரிராஜன், இதுகுறித்து காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போக்குவரத்து எஸ்ஐ தங்கராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் புலனாய்வு முடிக்கப்பட்டு குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் தனி நீதிபதி வசந்தகுமார் முன்பாக நடந்து வந்தது. வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் போக்குவரத்து எஸ்ஐ தங்கராஜ் குற்றவாளி எனக் கூறி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் ₹20 ஆயிரம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
The post வேகமாக வந்ததாக கூறி லஞ்சம் கேட்ட வழக்கு போக்குவரத்து எஸ்ஐக்கு 3 ஆண்டுகள் சிறை: காஞ்சிபுரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.
