×

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பிப்.22: நாமக்கல்லில், வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கன்வீனர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இதில் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். போதிய அளவில் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Confederation of Banking Unions ,Namakkal ,Federation of Banking Unions ,Kanveen Krishnasamy ,Dinakaran ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்