- Kollimalai
- Senthamangalam
- பால்ராஜ்
- பர்வத்துப்பட்டி, அரியூர்நாடு ஊராட்சி
- கொல்லிமலை ஒன்றியம்
- முத்துசாமி
- தின மலர்
சேந்தமங்கலம், பிப்.21: கொல்லிமலை ஒன்றியம், அரியூர்நாடு ஊராட்சி பரவாத்துப்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் (45). இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில், கடந்த 17ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி முத்துசாமி (60) என்பவருக்கு சொந்தமான கூந்தப்பனை விதையை ஏற்றிக்கொண்டு, முத்துசாமி, அவரது மகன் தேவராஜ் (35), மருமகள் மாலா (25), பேரன் கிருபானந்தம் (20), சஞ்சித் என்ற 4 மாத குழந்தையை ஏற்றிக்கொண்டு சேந்தமங்கலத்திற்கு சென்றுள்ளார். அடிவாரம் முதலாவது கொண்டை ஊசி வளைவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் கவிழ்ந்ததில், முத்துசாமி சம்பவ இடத்திலே பலியானார். பால்ராஜ் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து வாழவந்திநாடு போலீசார், நேற்று பால்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
The post கொல்லிமலையில் விபத்து சரக்குவேன் டிரைவர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.
