×

லோடு மேன் தற்கொலை

குன்றத்தூர்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், சண்முகா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (23). இவர், தனது தாய் கோமதி (43), தம்பி தினேஷ்குமார் (21) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த பாலமுருகன், அதே பகுதியில் உள்ள தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். அவரது தாய் மற்றும் சகோதரரும் அருகிலுள்ள தனியார் கம்பெனிகளில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, பாலமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, பாலமுருகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லோடு மேன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Load ,Balamurugan ,Shanmuga Nagar 6th Street, Pozhichalur ,Pallavaram ,Gomathi ,Dineshkumar ,Dinakaran ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...