திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே சினிமாவில் நடிக்க வந்த 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நடிகருக்கு 136 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ₹1,97,500 அபராதமும் விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே கங்கழா என்ற பகுதியை சேர்ந்தவர் ரெஜி (52). மலையாள சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் கோட்டயம் அருகே மேலுகாவு பகுதியில் ஒரு மலையாள சினிமா படப்பிடிப்பு நடந்தது. இதில் ரெஜியும் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அந்த படத்தில் நடிக்க வந்த 9 சிறுமியை ரெஜி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், மேலுகாவு போலீசில் புகார் செய்தனர். போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகர் ரெஜியை கைது செய்தனர். இந்த வழக்கு ஈராற்றுபேட்டை அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் ரெஜிக்கு 136 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ₹1,97,500 அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. அபராதத் தொகையில் ₹1,75,000 பணத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
The post சினிமாவில் நடிக்க வந்த சிறுமி பலாத்காரம்: நடிகருக்கு 136 ஆண்டு கடுங்காவல் சிறை appeared first on Dinakaran.
