×

போலீசாரை திட்டிய தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் சென்னிமலை சாலையில் கல்லேரி அருகே அனுமதி இல்லாமல் விஜய் கட்சியினர் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபடுவதாக காங்கயம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்யக்கூடாது என்றும் முறையாக போலீஸ் ஸ்டேசனில் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்னர் பிரசாரம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதை ஏற்க மறுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனையடுத்து காங்கயம் சென்னிமலை கவுண்டன்வலசு கிளை செயலாளர் நடராஜ் (51), அதே பகுதியை சேர்ந்த செயற்குழு உறுப்பினர் பிரதீப்குமார் (30) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Kangayam ,Kangayam police ,Vijay Party ,Galleri ,Chennimalai Road ,Kangayam, Tiruppur district ,
× RELATED ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாடு...