நாகப்பட்டினம்: தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வேளாங்கண்ணி பேராலய பகுதியில் கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது, பார்க்கிங்கில் ஒரு காரில் இருந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள், நாகையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி நாகப்பட்டினம் மாவட்ட வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் (40), பூம்புகாரை சேர்ந்த ஆனந்தராஜ் (33), வேதாரண்யத்தை சேர்ந்த முருகன் (எ) காஞ்சிநாதன் (31) ஆகியோர் என்பதும், அவர்கள் ரூ.6 கோடி மதிப்பிலான 2 கிலோ மெஸ்கலின் என்ற உயரர் ரக போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
