- நாமக்கல்
- மாவட்ட அளவிலான இலக்கிய மன்றப் போட்டிகள்
- மாவட்டம்
- தலைமை கல்வி அதிகாரி
- மகேஸ்வரி
- முதன்மை கல்வி அலுவலகம் பள்ளித் துறை
- இன்ஸ்பெக்டர்
- கிருஷ்ணமூர்த்தி
- மாவட்ட கல்வி அலுவலகம் பெரியசாமி
- திட்டங்கள்
- பள்ளி கல்வித் துறை
- - அளவிலான இலக்கியப் போட்டிகள்
நாமக்கல், பிப்.19: நாமக்கல்லில் மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி போட்டிகளை நடத்தினார். மாவட்ட கல்வி அலுவலகம் பெரியசாமி, பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாட்டு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவது குறித்தும் பேசினார். பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் கதை கூறுதல் போட்டிகளில் 15 வட்டாரங்களில் இருந்து 120 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டிகளில் 24 பேர் நடுவர்களாக செயல்பட்டனர். மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை மற்றும் கதை கூறுதல் போட்டிகளில் முதலிடம் பெற்ற 8 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
The post மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகள் appeared first on Dinakaran.
