வேலூர், பிப்.19: வேலூர் அருகே கட்டிட ேமஸ்திரி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த புதுவசூர் தனியார் பள்ளியின் பின்புறம் வேலூர் அலமேலுமங்காபுரம் அழகிரி நகரை சேர்ந்த வேலன்(32) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்து. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தலையில் வெட்டுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த வேலவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், வேலூர் டிஎஸ்பி பிருத்விராஜ் சவுகான் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை வேலன், கொலை செய்யப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தினர். கொலை தொடர்பாக 10 பேரை பிடித்து, விசாரணை நடத்தினர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை வேலூர் அருகே மேஸ்திரி கொலையில் appeared first on Dinakaran.
