புதுடெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில், தனது குழந்தையை சுமந்தவாறே பிளாட்பார்மில் பயணிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஆர்பிஎப் போலீஸ் ரீனாவை பலரும் பாராட்டி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் நடைபெறும் கும்ப மேளாவில் கலந்து கொள்வதற்காக தலைநகர் டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பக்தர்களில், கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகினர். அதனால் வடமாநில முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் ஆர்.பி.எப் (ரயில்வே போலீஸ்) கான்ஸ்டபிள் ஒருவர், தனது ஒரு வயது குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
தனது கடமையின் பொறுப்பை நன்கு உணர்ந்து பணியாற்றும் இந்த பெண் காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர். இவரது செயல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. தனது காவல் பணியை மற்றுமின்றி ஒரு தாயாக தனது குழந்தையையும் சுமந்து கொண்டு அவர் பணியாற்றி வருவது அவரது பொறுப்பை மேலும் வலுவூட்டுகிறது. தனது குழந்தையை சுமந்தவாறு, ரயிலில் செல்லும் பயணிகளை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லி ரயில் நிலையத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆர்பிஎப் போலீஸ்காரர்களில், ரீனா என்ற பெண்ணும் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.
அவர் தனது காவல் கடமையை மட்டுமின்றி, ஒரு தாயாக தனது குழந்தையுடன் பணியில் ஈடுபட்டு வருகிறார். தனது ஒரு வயது குழந்தையை மார்பில் அரவணைத்துக் கொண்டு, பிளாட்பார்மில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பயணிகளுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். குழந்தையோடு தனது கடமையைச் செய்வதன் மூலம், ரீனா, பெண் சக்திக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளார். அதனால் அவரது துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை மக்கள் பாராட்டி வருகின்றனர்’ என்று கூறினார்.
The post புதுடெல்லி ரயில் நிலையத்தில் குழந்தையை மார்பில் சுமந்தவாறு கடமையாற்றும் பெண் ஆர்பிஎப் போலீஸ்: சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு appeared first on Dinakaran.
