உத்திரப் பிரதேசம்: உ.பி. கும்பமேளாவை ஒட்டி அயோத்தி ராமர் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வரும் நிலையில், அவர்களை அழைத்துச் செல்ல 1 கி.மீ.க்கு ரூ.300 வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. 30 பைக்குகளை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிகளவில் வாகனங்கள் வருவதால், அயோத்தி நகரின் உள்ளே வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதை சாதகமாக்கி பைக் வைத்திருப்பவர்கள் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
The post அயோத்தி ராமர் கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருகை: 1கி.மீ ரூ.300 வரை வசூல்; 30 பைக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.
